Thursday 1 June 2017

ஊதியமாற்றங்கள் ஒரு முன்னோட்டம் :

BSNL ஊழியர்களின் மூன்றாவது ஊதிய திருத்தம் மிகவும் முக்கியமானது ஏனெனில் பெரும்பான்மையோர் சந்திக்கப் போகும் கடைசி ஊதிய மாற்றம் இதுவே.

01.10.2000 அன்று நமது இலாகா பொதுத்துறை நிறுவனமாக அடி எடுத்து வைத்த பொழுது அங்கீகரிக்கப்பட்ட சங்கம் மட்டுமே ஊதிய திருத்தம் சம்பந்தமாக நிர்வாகத்துடன் பேச முடியும் என்று சொன்னது. அதனால் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு நாங்கள் ஒன்றுபட்டு வந்து பேசினால் உங்களுக்கு ஆட்சேபனையில்லையே என்று நிர்வாகத்தை சம்மதிக்க வைத்து  தோழர் குப்தா தனது பெருந்தன்மையான அணுகுமுறையால் அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய ஊதியக் குழுவை அமைத்து 01.10.2000 முதல் ஒரு சிறப்பான ஊதிய மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உடன்பாட்டிலும் தோழர் நம்பூதிரியையே முதல் கையெழுத்திட வைத்து ஒரு சிறப்பான ஊதியமாற்றத்தை எற்படுத்தித்தந்தார்.

அடுத்ததாக 01.01.2007 முதலான இரண்டாவது ஊதிய மாற்றம் என்பது BSNLEU சங்கத்தின் ஏகபோக அணுகுமுறையால் சவலைப்பிள்ளையாக அமைந்தது. அங்கீகரிக்கப்பட்ட சங்கம் நாங்கள் மட்டுமே  நிர்வாகத்துடன் பேசுவோம் உங்களது பரிந்துரைகளை எங்களிடம் கொடுங்கள் என பெரியண்ணன் மனப்பான்மையோடு செயலாற்றியது.                      
             
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் பெற்றுத்தருவோம் இது தங்களது கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த பொதுத்துறை ஊழியர்களின் எண்ணமும் அதுவே என்றனர். அதிகாரிகள் ஒப்பந்தம் முடிந்ததும் அதன் அடிப்படையில் நமது பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்றனர். இவ்வாறாக பல்வேறு காரணங்களைக் கூறி ஊதியமாற்றம் பெறுவதை தள்ளிப்போட்டு வந்தது நம்பூதிரிச்சங்கம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிர்வாகம் கட்டாயப்படுத்தி ஒப்பந்தத்தில் நம்பூதிரிச் சங்கத்தை கையெழுத்திட வைத்தது.
         

திகாரிகள் ஊதியமாற்றம் பெற்றபோது 68.8 சதவிகிதமே பஞ்சப்படி உயர்ந்திருந்தது அதனால் அதிகாரிகள் 68.8 சத பஞ்சப்படி இணைப்புடன் ஊதியமாற்றம் பெற்றனர் ஆனால் நமது ஒப்பந்தம் கையெழுத்தான போது பஞ்சப்படி 78.2 சதத்தை எட்டியிருந்தது. நிர்வாகம் அதிகாரிகளுக்கு உயர்த்திக் கொடுக்கும் போது உங்களுக்கும் உயர்த்திக்கொடுக்கப்படும் என்று கூறியதின் அடிப்படையில் அறைகுறையான  உடன்பாட்டால் 9.8 சதம் குறைவான ஊதிய நிர்ணயத்தையே ஊழியர்கள் பெற்றார்கள். ( உயர்ஊதியம் பெற்றுத்தந்தோம் அதுவும் லட்சக்கணக்கில் நிலுவைத்தொகையுடன் பெற்றுத்தந்தோம் என சாதனை தம்பட்டம் அடித்தது தனிக்கதை )   நிர்வாகமும் 78.2 சத பஞ்சப்படி இணைப்பை ஊழியர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வந்தது. நமது சங்கத்தின் கடுமையான முயற்சிகளுக்குப் பின்பே 78.2 ஊதிய நிர்ணயத்தை ஊழியர்கள் பெற்றார்கள் அதன் பின்பும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அந்த நிர்ணயம் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு NFTE மற்றும் AIBSNLPWA சங்கங்கள் எடுத்து வைத்த வாதங்களின் அடிப்படையில் 78.2 ஊதிய நிர்ணயத்தை ஓய்வூதியர்கள் பெற்றனர். ஓய்வூதியர்களின் 78.2 ஊதிய நிர்ணயப் போராட்டம் BSNL நிறுவனத்தின் மீது DOT ஏற்றி வைத்த 60:40 பென்சன் பங்களிப்பு எனும் சுமையையும் இறக்கி வைத்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஏழாவது ஊதியக்குழு :

             மத்திய அரசு ஊழியர்களின் 01.01.2016 முதலான ஊதிய  திருத்தத்திற்காக திரு.A.K..மாதுர் அவர்களின் தலைமையில் 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது . ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்தான் அதிகாரிகளின் ஊதியமாற்றத்திற்கும் நமது ஊதியமாற்றத்திற்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியமாற்றமும் அமுலாகிவிட்டது. அதுமட்டுமின்றி ஏழாவது ஊதியக்குழுவின் ஓய்வூதியர் சம்பந்தமான பரிந்துரைகள் நமது துறை ஊழியர்களுக்கும் அமுல்படுத்தப்பட்டு BSNL ஓய்வூதியர்களும் பயன் பெற்று விட்டனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

பொதுத்துறை அதிகாரிகள் ஊதிய மாற்றம் : 

பொதுத்துறை அதிகாரிகளின் ஊதிய மாற்றத்திற்காக நீதியரசர் சதிஸ்சந்திரா அவர்களது தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவும் தனது அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதிகாரிகள் ஊதிய மாற்றம் சிறப்பாக அமைந்தால்தான் நமது ஊதிய மாற்றமும் சிறப்பாக அமையும். எனெனில் இரண்டாவது ஊதிய மாற்றத்தின் போது IOC , ONCG போன்ற லாபம் அதிகம் சம்பாதிக்கும் பொதுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு 40% அளவிற்கு ஊதிய நிர்ணயம் வேண்டி தனது போராட்டத்தை நடத்தி சிறைக்கும் சென்றனர். அவர்களின் போராட்டத்தின் எழுச்சியாக மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனவருக்கும் பொதுவாக 30% ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதி வழங்கினார்.


நீதிபதி சதிஸ்சந்திரா குழு அறிக்கை :

1. முழுமையான பரிந்துரைகள்

2.அறிக்கையின் முக்கிய விபரங்கள்

3.தமிழாக்கம் செய்யப்பட்ட அறிக்கை விபரங்கள் 

4. அறிக்கையின் விளக்கப்படம்

--------------------------------------------------------------------------------------------------------------------------

BSNL ஊழியர்களின் மூன்றாவது ஊதியமாற்றம்:

BSNL ஊழியர்கள் தங்களது ஊதியமாற்றத்தை பற்றி நிர்வாகத்துடன் ஆலோசிக்க பொதுத்துறைகளுக்கான இலாகாவிடமிருந்து வழிகாட்டுதல் தேவை. அவ்வமைப்பு இதுவரை தனது வழிகாட்டுதல் எதனையும் இதுவரை வெளியிடவில்லை. நமது சங்கம் DPE அமைப்பு அத்தகைய வழிகாட்டுதலை விரைவில் வெளியிடக்கோரி பல்வேறு வழிகளில் போராடி வருகிறது. 

அதன் முதல் கட்டமாக நமது தமிழ்மாநிலச் சங்கம் சார்பாக மத்திய சங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் 2017 ஊதிய மாற்றமும் - எதிர்நோக்கும் சவால்களும் என்ற தலைப்பில் 22.11.2016 அன்று திருச்சி மாநகரில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அக்கருத்தரத்தரங்கில் நமது பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார் . மேலும் BHEL  நிறுவனத்தின் AITUC சங்கம் சார்பாக தோழர் V.ராஜேந்திரன் , மாநிலதுணைத்தலைவர் அவர்களும் , தோழர் C.சுகுமார் , பொதுச்செயலர் LPC - NLC அவர்களும் மற்றும் FCI சார்பாக தோழர் K.வீரமணி  , மண்டலத்தலைவர் BKNKS ஆகிய பொதுத்துறை ஊழியர் சங்கத்தலைவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கைச் சிறப்பித்தனர்.

BSNLEU சங்கத்தின் நவம்பர் 2016 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெற்ற மத்திய செயற்குழு ஊதிய மாற்றம் சம்பந்தமாக அனைத்து சங்கங்களுடன் கலந்து பேசி ஒருமித்த அணுகுமுறையை உருவாக்குவதற்கு மத்திய தலைமைக்கு வழிகாட்டியுள்ளது.


  • 01.12.2016 அன்று விருதுநகரில் மாநிலச்செயலர் தோழர் K.நடராஜன் " ஊதிய மாற்றம் 2017 " என்ற தலைப்பில் தோழர்களுடன் உரையாடினார்.
  • 26.12.2016 அன்று BSNL நிர்வாகம் திருமதி அனுராதா பண்டா அவர்களது தலைமையில்  ஊழியர் தரப்பின்றி 4 அதிகாரிகள் மட்டுமே கொண்ட குழுவை அமைப்பதாகவும் , ஊதிய மாற்றத்தை தொடங்குவதற்கு DPEயின் வழிகாட்டுதல் தேவை எனவும் கூறி ஒரு உத்தரவை வெளியிட்டது.  
  • 29.01.2017 அன்று மத்திய தொழிற்சங்கங்களின் சார்பாக 01.01.2017 முதலான ஊதிய மாற்றம் தொடர்பாக ஒரு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
  • 29.03.2017 அன்று BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பின் சார்பாக DOT செயலரிடமும், DPE செயலரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  கோரிக்கை மனுவைப் படிக்க
  • 09.05.2017 அன்று நமது மத்திய சங்கம் ஊதிய மாற்றம் சம்பந்தமாக DPE வழிகாட்டுல் வெளிவர பிரதமர் அவர்களின் தலையீட்டைக்கோரி பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியது. பிரதமர் அலுவலகமும் தமது கோரிக்கையை பரிசீலிக்க கோரி DPE நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். கடிதம் காண
  • 17.05.2017 அன்று நமது மத்திய சங்கம் ஊதிய மாற்றம் சார்பாக DOT  செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. கடிதம் காண
  • சதிஸ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்துள்ள Afforability Clause சம்பந்தமாக நமது மத்திய சங்கம் தனது TELECOM இதழில் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது.தலையங்கம் காண


இவ்வாறாக நமது சங்கம் ஒரு சிறப்பான ஊதிய மாற்றத்தை கட்டமைப்பது தனது கடமை என்று செயல்பட்டு வருகிறது.

ஊழியர் ஆதரவு நிர்வாகம் :

நமது நிறுவனத்தின் CMD  திரு அனுபம் வஸ்தவா அவர்களும் ஊதிய மாற்றம் குறித்து DOT மற்றும் DPE அதிகாரிகளுக்கு ஊழியர்களுக்கு ஆதரவாக் குறிப்பு ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில்  பொதுத்துறை ஊழியர்களில் 16 சதம் அளவிற்குள்ள நமது துறைக்கு ஊதிய கமிட்டி தனிக்கவனம் தரவேண்டும் எனவும் , 15 சத ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் , பென்சன் பங்களிப்பில் ஊழியர்களின் இறுதி ஊதிய நிலை கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் போராட்டங்களை தவிர்க்கவும் , போட்டி சூழலை உணந்து ஊழியர்களை உற்சாகப்படுத்தவும் , லாபம் நோக்கிய திசையில் பயணிக்க துவங்கும் நிறுவனத்தில் முழுமையான ஊதிய மாற்றம் அவசியம் எனவும் , ஊழியர்கள் கம்பெனிக்குள் நுழையாமல் இருந்திருந்தால் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையில் அடிப்படையில் அவர்கள் ஊதிய மாற்றத்தை பெற்றிருப்பார்கள் என்கிற தனித்தன்மை கணக்கில் கொள்ளப்படவேண்டும்  என்று அழுத்தமாக கூறியுள்ளார்.
  

இறுதியாக நமது சங்கத்தின் தலைமையிலான National Forum of BSNLUnions and Associations  சார்பாக 24.05.2017 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊதிய மாற்றம் சம்பந்தமாக DPE தனது வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தும் விதமாக ஜீன்'14-2017 அன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆகவே தோழர்களே மத்திய சங்க அறைகூவலான ஜீன்'14 ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.



                                 

No comments:

Post a Comment